அசத்தலான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் புதுப்பொலிவுடன் களமிறக்கப் பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ், இரட்டை-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் என இரு வேரியன்ட்டில் கிடைக்கும்.
புதிதாக எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்திலும் எரியும் டிஆர்எல்., விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பைக்கின் முகப்பு கம்பீரமாக உள்ளது. மூன்று ரைடிங் மோடு, முன்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய போர்க், புளூடூத் கனெக்டிவிட்டி, டிவிஎஸ் 'ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட்', ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் சிறப்பம்சம். இதன் 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4- வால்வு, ஆயில்-கூல்டு இன்ஜின் 20.82 பிஎச்பி பவரையும், 17.25 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 -ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். கிளாசி பிளாக், மேட் புளூ, பியர்ல் ஒயிட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
விலை(எக்ஸ்ஷோரூம்):
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ.1,33,432
இரட்டைசேனல் ஏபிஎஸ் - ரூ.1,38,432
சென்னை டீலர்: Brilliant TVS - 90809 17906
கோவை டீலர்: Lotus TVS - 98422 12828
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!