Load Image
dinamalar telegram
Advertisement

மண்ணை இளகச்செய்யும் மண்புழுக்கள்

மண்ணை இளகச் செய்து காற்றோட்டம், வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்கு மண்புழுக்கள் உதவுவதால் நீடித்த வேளாண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தோப்புகளில் உரப்படுகை, தார்ப்பாய், தொட்டி, உரக்கூடாரங்களில் மண்புழு உரம் தயார் செய்யலாம். மண்புழு உரம் பயன்படுத்தினால் களைகள் வராத சூழல் ஏற்படுத்தலாம். நீர் இருப்பு சக்தி அதிகம் உள்ளதால் மண்ணில் வளமான சூழலில் நன்மை செய்யும் இதர உயிரினங்களை மண்புழுக்கள் வளர விடும்.

கோழி எரு கொட்டினால் மட்காது உள்ள நிலையில் மண்கெடும். பயிரும் பாதிக்கப்படும். களைகள் பெருகிவிடும். முறையாக நீர் தெளித்து 6 முதல் 8 மாதம் வரை மட்க வைத்து சிதைவடைந்த பின் கோழி எருவை பலநாட்கள் பாதுகாக்கலாம். ஆனால் மண்புழு உரத்தை போல மகத்தான பலன் கிடைக்காது. மண்புழுக்கள் மண்ணின் கார அமில நிலையை சீர்படுத்துவதுடன் வேதியியல் தன்மையையும் சீர்படுத்துகின்றன.

மண்புழு உரத்தால் பலவித சத்துக்கள் பயிருக்கு கிடைக்கச் செய்யலாம். குறிப்பாக தழை, மணி, சாம்பல், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற சத்துக்கள் பயிர்களுக்கு உடனடியாகவும் முழுமையாகவும் சிறிது சிறிதாக அறுவடை காலம்வரை பயன் படுத்தலாம். பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பிராணவாயு, ஜிப்ரலின், சைட்டோசைனின் முதலிய பல வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன.

மண்ணில் காற்று, நீர், வெப்பத்தை ஒழுங்குபடுத்தி இருந்தாலும் இறந்தாலும் நன்மை நிலையை உருவாக்கும். களையில்லா பயிர் சாகுபடிக்கு மண்புழு உரத்தை தோட்டத்திலேயே தயாரிப்பது நல்லது.

ராஜமோகன், தலைமை இயக்குனர்
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
துவாக்குடி, திருச்சி - 620 015

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement