dinamalar telegram
Advertisement

அடுத்த ஆண்டு 'அட்டாக்' ஐபோன் எஸ்.இ., 2022

Share

'ஆப்பிள்' நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றான, ஐபோன் எஸ்.இ., வரிசையில், அடுத்ததாக, 'ஐபோன் எஸ்.இ., 2022' அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

புதிய ஐபோன் எஸ்.இ., 2022 ஸ்மார்ட்போன், 5ஜி இணைப்பு வசதியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் எஸ்.இ., 2020 மாடல் சந்தையில் வரவேற்பு பெற்றதை அடுத்து, 5ஜி இணைப்புடன் இந்த புதிய போன் வருகிறது.

மேலும், இதில் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏ15 பயோனிக் சிப்' இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மற்றபடி, இந்த போனின் டிஸ்பிளே உள்ளிட்டவை, முந்தைய மாடலான எஸ்.இ., 2020 போலவே இருக்கும் என்றும், பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் கருதப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement