உள்நாட்டு நிறுவனமான 'ஆம்ப்ரேன்', அண்மையில் இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஆம்ப்ரேன் டாட்ஸ் டியூன் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' எனும் பெயரில் இது சந்தைக்கு வந்துள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த இயர்பட்சை 29 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பட்சை வைத்துக் கொள்ளும் கேசில் உள்ள சார்ஜையும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. பட்ஸ் மட்டும் எனில், ஆறரை மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும்.
இந்த இயர்பட்ஸ், கறுப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை என, மூன்று வண்ணங்களில் வந்துள்ளது. இளஞ்சிவப்பு தனித்து தெரிகிறது. பட்ஸ் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன.
விலை: 2,199 ரூபாய்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!