'சாம்சங்' நிறுவனம் இந்தியாவில் புதிதாக மொபைல்போன், லேப்டாப், பவர்பேங் என பலவற்றையும் 'சார்ஜ்' செய்வதற்கு 'அடாப்டர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. '35 வாட் பவர் அடாப்டர் டுயோ' எனும் பெயரில் இந்த அடாப்டர் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த அடாப்டர் வாயிலாக, ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு போன்களை மட்டுமின்றி ஐபோன்களையும் இதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். மேலும் டேப்லெட்டுகள், லேப்டாப்புகள், ஸ்மார்ட்வாட்சுகள் ஆகியவற்றையும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
அத்துடன் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன், பவர்பேங்க் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம். இதில் ஒரு யு.எஸ்.பி., டைப் சி போர்ட்டும், ஒரு யு.எஸ்.பி., டைப் ஏ போர்ட்டும் உள்ளது. மொத்தத்தில் வீட்டிலிருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் இந்த ஒரு அடாப்டரே போதுமானது.
விலை: 2,299 ரூபாய்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!