Load Image
dinamalar telegram
Advertisement

வந்தா ராசாவாதான் வருவேன்

'ஸ்மார்ட்வாட்ச்' சந்தையில், விரைவில் புதிய போட்டி ஆரம்பமாகப் போகிறது. 'ஆப்பிள் வாட்சு'க்கு போட்டியாக, 'கூகுள் வாட்ச்' தயாராகி வருகிறது. அனேகமாக, அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், கூகுள் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் வாட்ச் குறித்து அவ்வப்போது ஏதாவது செய்திகள் வருவது வழக்கம் தான். கடந்த அக்டோபரில் 'கூகுள் பிக்ஸல் 6' ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது, கூடவே, கூகுள் வாட்சும் அறிமுகம் ஆக உள்ளதாக ஒரு செய்தி பரவி, பின் அடங்கியது. இப்போது, அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது.

கூகுளின் இந்த வாட்சுக்கு, தற்சமயம் 'ரோஹன்' என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வாட்சுடன் மோதுவதற்கு ஏதுவாக, கூகுள் நிறுவனம் ஏற்கனவே 'பிட்பிட்' பிராண்டை கையக்கப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு சந்தையில், ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில், முதலிடத்தில் ஆப்பிள் வாட்சும், இரண்டாவது இடத்தில் சாம்சங் வாட்சும் உள்ளன. கூகுள் வாட்ச் வரும்பட்சத்தில், போட்டி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement