Load Image
dinamalar telegram
Advertisement

பிடிக்கும் 'ரிவோல்ட்'

அருமையான ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் விலை ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாரன்டி காலத்தை ஆறு ஆண்டு அல்லது 1 லட்சம் கி.மீ., ஆக குறைத்துள்ளனர். சென்னை, டில்லி, மும்பை, புனே, ஆமதாபாத் உட்பட 70 நகரங்களில் கிடைக்கும்.

இதில் 3 கிலோவாட் மோட்டார், 72 வோல்ட், 3.24 கிலோவாட் லித்தியன் அயன் பேட்டரி இடம் பெற்றிருக்கும். சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் தேவைப்படும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ., துாரம் பயணிக்கலாம். மணிக்கு 85 கி.மீ., வேகத்தில் செல்லும்.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட பைக், எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், 'மை ரிவோல்ட்' செயலி மூலம் ஜியோ பென்சிங், பேட்டரி நிலை, மைலேஜ் உட்பட பல தகவலை பெறும் வசதி, மூன்று ரைடிங் மோடுகள், டிஸ்க் பிரேக் உடன் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 4ஜி இ-சிம் கார்டு வசதி சிறப்பம்சம்.

விலை: ரூ. 1.40 லட்சம் (ஆன்ரோடு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement