Load Image
dinamalar telegram
Advertisement

பறக்கும் 'மெர்சிடிஸ் பென்ஸ்'

பார்த்தாலே பரவசம் தரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் 'ஏஎம்ஜி ஏ 45 எஸ்' 4மேட்டிக் பிளஸ் ஹேட்ச்பேக் கார் அறிமுகமாகியுள்ளது. இதன் சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் 421 பிஎச்பி பவரையும், 500 என் எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். அதிவேக ஹேட்ச்பேக் ரக காராக திகழ்கிறது. 0-100 கி.மீ., வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டும். மணிக்கு 270 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

எல்இடி ஹெட்லைட், புதுமையான வடிவில் கிரில் அமைப்பு, 19 இன்ச் அலாய் வீல், பக்கெட் ஸ்டைலில் ஸ்போர்ட் இருக்கை, டிஸ்பிளே, 'ஹாய் மெர்சிடஸ்' வாய்ஸ் கமாண்ட், எம்பியூஎக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏஎம்ஜி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

அறிமுக விலை: ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Benz Sundaram Motors - 93840 58651,
Titanium Motors - 81908 10000

கோவை டீலர்: Mercedes Benz Sundaram motors - 93848 35364

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement