dinamalar telegram
Advertisement

முளைப்புத்திறன் அறிவோம்

Share

நெல், எள்ளில் 80 சதவீதம் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். பரிசோதனை செய்த பின் விதைத்தால் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்த பயிர்களுக்கேற்ப முளைப்புத்திறன் சதவீதம் மாறுபடும்.

சோளம், கம்பு, கேழ்வரகு, பாசிப்பயறு, உளுந்து, துவரை, தட்டைப்பயறு, வீரியப்பருத்தி, பிரெஞ்சுபீன்ஸ், பீல்டுபீன்ஸ் 75 சதவீத முளைப்புத்திறன் தேவை. முள்ளங்கி, நிலக்கடலை, நூல்கோல், சூரியகாந்தி, வெங்காயம், கீரை, சீனிஅவரை, முருங்கை, தக்காளி, கத்தரி 70 சதவீதம். ரகப்பருத்தி, கொத்தமல்லி, வெண்டை 65 சதவீதம் மற்றும் புடலை, பூசணி, பாகற்காய், கேரட், பீட்ரூட் 60 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல விதைகளில் கலப்பு இருக்கக்கூடாது. வெண்டையில் 99 சதவீத புறத்துாய்மை வேண்டும். கேழ்வரகு, எள்ளில் 97, நிலக்கடலை 96, காரட், கொத்தமல்லி 95, மற்றவையில் 98 சதவீதம் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement