dinamalar telegram
Advertisement

மழைக்கு பின் விதையை சேமிக்கலாம்

Share

விதை அறுவடை செய்த காலம் முதல் நடவு செய்யும் காலம் வரை முளைப்புத் திறன் மற்றும் வீரியம் குறையாமல் பராமரிப்பதே விதை சேமிப்பு. சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைத்தால் தான் அதன் வீரியம் பராமரிக்கப்படும். பிற இன கலப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
நெல் விதைகளில் 13 சதவீத ஈரப்பதம் அளவிற்கு உலர்த்தி சாக்கு அல்லது துணிப்பையில் ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை சேமிக்கலாம். ஈரப்பதத்தை 10 - 12 சதவீத அளவிற்கு குறைத்தால் மெல்லிய பாலித்தீன் உள் உறை கொண்ட சாக்குப் பைகளில் ஒன்றரை ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம்.

மக்காசோளம், சோளம் மற்றும் கம்பு விதைகளில் 12 சதவீதம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக் கடலை, அவரை, கொள்ளு, தட்டைப் பயறு விதைகளில் ஈரப்பதம் 9 சதவீத அளவிற்கு குறைத்து சாக்கு அல்லது துணிப் பைகளில் 8 முதல் 9 மாதங்கள் வரை சேமிக்கலாம். கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர் விதைகளை 5 - 8 சதவீதம் அளவிற்கு உலர்த்தி உள் உறை கொண்ட சாக்குப் பைகளில் 12 - 15 மாதங்கள் வரை சேமிக்கலாம்.

பாரம்பரிய தொழில்நுட்பத்தின் படி சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் மற்றும் வேம்பு இலைகளை வைத்தால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பயறு வகை பயிர்களின் விதைகளுடன் செம்மண் சேற்றுக் கலவை கலந்து காய வைத்து சேமித்தால் பூச்சி தாக்குதலை தடுக்கலாம். பருவமழை காலத்திற்கு பின்பு அறுவடை செய்த விதைகளை வெயிலில் உலர்த்தி சரியான ஈரப்பதத்துடன் சேமித்து வைக்க வேண்டும்.

கமலா ராணி, ராஜபாண்டி வேளாண்மை அலுவலர்கள்
விதை பரிசோதனை நிலையம், மதுரை
94873 48707

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement