dinamalar telegram
Advertisement

'கைகட்டி நிக்கத் தேவையில்லை'

Share

''வருமானம் எவ்வளவுங்கறத விட, கையில ஒரு தொழில் இருக்கு. யார்கிட்டயும் கை கட்டி நிக்க வேண்டாம் பாருங்க,'' என்கிறார் ஆட்டுக்கார பாலன்.
வெள்ளலுார் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுகொண்டிருந்த அவரிடம் பேசினோம். அதிலிருந்து...


நம்ம பட்டியில, 500 ஆடுங்க இருக்குது. விவசாய நிலங்கள்ல கிடை போடறோம். ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரைக்கும் கிடைக்குத் தருவாங்க. ஒரு ஏக்கருக்கு 5 நாள் கிடை போட்டா, நல்லா புழுக்கை விழும்.


அன்னுார் புளியம்பட்டில இருந்து பாலக்காடு வரைக்கும் கிடை போடுவோம். கேரளாவுல, தை, மாசி மாதத்துல நல்ல கிராக்கி இருக்கும். வைக்கோலும் கிடைக்கும். நல்ல தண்ணியும் இருக்கும். கூடுதலா வருமானம் கிடைக்கும்.


சின்ன வயசுல இருந்தே இந்த தொழில்தான். இப்ப ஆடு மேய்க்கறதுக்கு ஆள் கிடைக்கறது இல்ல. ஒரு நாளைக்கு, 600 ரூபாய் கூலி குடுத்து ஆள் வச்சுருக்கேன். கிடைல வர்ற காசு, தினசரி சாப்பாட்டுச் செலவுக்கு சரியா இருக்கும். குட்டி, ஆடு விக்கற வருமானத்த வச்சு சமாளிக்கிறோம்.


என்ன பெரிய வருமானம். இதும் விவசாயம் மாதிரிதான். வானம் மனசு வச்சா நல்லா இருப்போம். தொழில்ல கண்ணும் கருத்துமா இருக்கணும். ஒரு ஆட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா, ஒரு மாச உழைப்பு வீணாப் போகும். நல்ல பச்சை இருக்கு. அதனால, பாலும் நல்லா இருக்கும்.
குட்டிக்குப் போக மீதிய கறந்து கீழ விடணும். இல்லன்னா, கட்டிப்பால குடிச்சுட்டா, குட்டிய துாக்கித்தான் போடணும். நோவு வந்துட்டா மருந்து வாங்கி ஊத்தணும். மத்தபடி அப்படியே போகுது.


வருமானம் எவ்வளவுங்கறத விட, கையில தொழில் இருக்கு. யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டாம் பாருங்க என, சுய தொழிலின் மகத்துவத்தை சுருக்கமாகப் பேசி நகர்ந்தார் ஆட்டுக்கார பாலன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement