dinamalar telegram
Advertisement

காகிதப்பூவில் கலைவண்ணம் 'கொரோனா' தந்த நல்வாய்ப்பு

Share

''கொரோனா ஊரடங்கு காலமே, கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஆர்வத்தை துாண்டியது,'' என்கிறார், கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவருக்கு சிறு வயது முதலே கலைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. அப்போதெல்லாம் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே, காகிதங்களில் அழகழகான கலைப்பொருட்களை செய்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், இக்கலைப்பொருட்களுக்கு இருக்கும் மதிப்பை தெரிந்து கொண்டார். வீட்டுக்குள் கண் கவரும் வகையில் அலங்கரிக்க எண்ணுவோர், பிறந்தநாள், திருமண நாளை வீட்டில் கொண்டாட எண்ணுவோருக்கு, அதற்கேற்ற வகையில் அழகும், கலையம்சமும் கொண்ட பொருட்கள் கிடைப்பதில்லை.

அத்தகைய பொருட்களை நேர்த்தியுடன் செய்யத்தெரிந்த ஐஸ்வர்யா, அவற்றை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டதும், பலரும் வாங்கிக்கொள்ள முன் வந்தனர். இப்படி, வியாபாரம் பெருக ஆரம்பித்தது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குகின்றனர்.

காகிதங்கள், சார்ட், கார்ட்போர்டு என முழுவதும் நிலைத்தன்மை கொண்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, கலைப்பொருட்கள் தயார் செய்கிறார். கழிவுப்பொருட்களை கலைநயம் கொண்டதாக மாற்றியும் அசத்துகிறார்.

வாடிக்கையாளர்கள் பலர், தேவையான வண்ணங்களில், அளவுகளில் அலங்கார பொருட்கள் தயார் செய்து தரும்படியும் கேட்கின்றனர். அதையும் செய்து கொடுக்கும் ஐஸ்வர்யா, வரும் காலத்தில் மாணவியர், இல்லத்தரசிகளுக்கென பயிற்சி வகுப்புகளும் நடத்த திட்டம் வைத்திருக்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அருமை .இன்னும் சிறப்பாக வளருங்கள் .புதிய சிந்தனைகள் தான் மனிதர்களை மனித இனத்தை அழியாமல் காக்க கூடியது .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement