Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* துடிப்பா செயல்படுற அமைச்சர் சேகர்பாபுவை 'செயல் வீரர்'னு பாராட்டி அமைச்சர்களுக்கு முன்னுதாரணமாக்குற முதல்வர், அரியலுார் அனிதா/ சேலம் தனுஷ் மாதிரி பயப்படாம, முதல் முயற்சியிலேயே 'நீட்' தேர்வுல 710 மதிப்பெண்கள் வாங்கின தஞ்சாவூர் அரவிந்தை 'மாணவர்களின் வழிகாட்டி'ன்னு சொல்லணும்தானே!

* 'திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கான பணி இடையூறுகள் களையப்படணும்'னு அறம் திரைப்பட இயக்குனர் போராடி ஜெயிக்கிறார். 'மக்கள் நலனே சுவாசம்'னு வாழ்ற நடிகர்களும் இம்மாதிரியான சூழல்கள்ல இனி போராட முன் வரணும்; அதுதான்... அன்பு; அதாவது, ஜெய் பீம்!

* 'குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல் துறை இருக்க வேண்டும்!' - ஜூலை 2021ல் முதல்வர் விருப்பம்; 'ஆடு திருடர்களால் கொலையுண்ட, 'தீவிரவாத தடுப்பு கமாண்டோ' பயிற்சி பெற்ற திருச்சி காவல் அதிகாரி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவி!' - நவம்பர் 2021ல் முதல்வர் வருத்தம்; நோ கமென்ட்ஸ்!

* 'கடந்த ஆட்சியில் மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிக்காததே தலைநகரம் தத்தளிக்க காரணம்'னு மனம் திறக்கிற ஆட்சியாளர்கள், மேம்பால/ கட்டட திறப்பு விழாக்கள்ல, 'முந்தைய ஆட்சியின் சிறப்பான பணியே இத்திறப்பு விழாவிற்கு காரணம்'னு மனசாட்சியோட சொல்லணுமா... இல்லையா! ஹலோ... உங்களைத்தான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement