'பழசு' என கழிக்கப்படும் அறைகலன்களுக்கு, தனது 'இண்டிகா கிரியேஷன்ஸ்' மூலம் புதுவாழ்வு கொடுத்து தானும் வளம் பெற்று வருகிறார், சென்னை பெருங்குடியின் 75 வயது சாந்தா நாராயண்.
பொக்கிஷம்
'கருங்காலி, தேக்கு, பலா உள்ளிட்ட பலமிக்க மரங்களிலான 500க்கும் அதிகமான அறைகலன்களின் பொக்கிஷ பெட்டகம் என் கடை. குறைந்தபட்சம் 40 முதல் 100 வயதிற்கு மேற்பட்ட 'ஆன்டிக்' அறைகலன்கள் என்கிட்டே இருக்கு. இதோட, என் கைக்கு வர்ற பொருட்களுக்கு புது வடிவமும் தர்றேன்; உதாரணத்துக்கு சொல்லணும்னா, ரயில் இருக்கையை அழகான நாற்காலியா மாத்தியிருக்கேன்!' என்கிறார் சாந்தா.
நுணுக்கமான மர வேலைப்பாடுகளில் சீன பாரம்பரியம் சொல்லும் ஓபியம் பெட், அன்றைய ஆசிரியர் இருக்கைகள், பழமையின் பெருமை பேசும் சாய்வு நாற்காலிகள்/ உணவு மேஜைகள்/ ஆளுயர கடிகாரங்கள் என இக்கடையில் இருக்கும் எல்லாவற்றிலும் மின்னுகின்றன தனித்துவமிக்க கலை வேலைப்பாடுகள்!
'ஆன்டிக் பொருட்களோட மதிப்பு தெரிஞ்சவங்க மட்டும்தான் எங்களோட வாடிக்கையாளர்கள்; 100 ஆண்டுகள் கழிச்சும் எங்க கடை பேசப்படும்!' என்கிறார் ஷ்ரிதி நாராயண், சாந்தாவின் மகள்.
சிறப்பு பொருள்: 'அலமாரி'யாக மாற்றப்பட்டிருக்கும் தேக்கு பீப்பாய் - ரூ. 1.05 லட்சம்
98409 94939
வானமே எல்லை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!