dinamalar telegram
Advertisement

மீண்டும் கலக்க வருகிறது 'வின்ஆம்ப்'

Share

ஒரு காலத்தில் 'ஓஹோ' என இருந்த பாடல்களை கேட்பதற்கான எம்.பி., 3 மீடியா பிளேயரான 'வின்ஆம்ப்' மீண்டும் வருவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பாடல்களை கேட்பதற்காக 1997ல் அறிமுகமானது, இந்த வின்ஆம்ப் மீடியா பிளேயர்.

குறிப்பாக, எம்.பி., 3 டிராக்குகளை இசைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிளேயர்களில் வின்ஆம்ப் முன்னணி வகித்து வந்தது. தற்போது, 'ஸ்பாட்டிபை' உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் செயலிகள் பல வந்த பின், வின் ஆம்ப் என்ற ஒன்று இருந்ததே பலருக்கு மறந்து போய்விட்டது.

இப்போது மீண்டும் புதிய வடிவத்தில், மேம்பட்ட வசதிகளுடன் அறிமுகம் ஆக உள்ளது. இது குறித்து அதன் இணையதளத்தில், அடுத்த தலைமுறையினருக்கான வின்ஆம்ப் தயாராகுவதாகவும், வெறும் அப்டேட் செய்வதாக இல்லாமல், முற்றிலும் மாற்றி அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement