dinamalar telegram
Advertisement

மொழியை மாற்றினால் 15 ஆண்டு சிறை!

Share

கிழக்காசிய நாடான வட கொரியாவை, மர்மப் பிரதேசம் என்று அழைக்கின்றன, மற்ற உலக நாடுகள். கிம் ஜங் யுன் என்ற சர்வாதிகாரியால் ஆட்சி செய்யப்படும் இந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் உண்டு.
வெளிநாடுகளின் கலாசாரத்தை பின்பற்றுவது, சினிமா பார்ப்பது, 'டிவி' நிகழ்ச்சி பார்ப்பது எல்லாம், அங்கு குற்றச் செயல்கள். கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என, குரல் எழுப்பினால், நெற்றிப் பொட்டிலேயே சுட்டு, எமலோகத்துக்கு அனுப்பி விடுவர்.
இங்கு, கொரிய மொழி பேசப்படுகிறது. 'முன்க்வா' என்ற வட்டார கொரிய மொழி தான், இங்கு அதிகாரப்பூர்வ மொழி.
ஆனால், சமீபகாலமாக இங்குள்ள இளைஞர்கள், அண்டை நாடான தென் கொரியாவில் புழக்கத்தில் உள்ள, 'ப்யூஜன்' என்ற வட்டார மொழியை பேசும் வழக்கம் அதிகரித்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட கிம் ஜங், 'இளைஞர்கள், வட கொரிய வட்டார மொழியைத் தான் பேச வேண்டும். தென் கொரிய வட்டார மொழியில் பேசினால், 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்...' என, அறிவித்துள்ளார்.
ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement