dinamalar telegram
Advertisement

கலக்கல் மேடை பாடகி!

Share

உஷா அய்யர் என்ற தமிழ் பெண், கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த, உதுப் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து, உஷா உதுப் ஆனார். தற்சமயம்,
70 வயதைத் தாண்டிய போதும், மேடைகளில் இசைக்கச்சேரிகள் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இவரது தந்தை, போலீஸ்காரர். தன் பிள்ளைகளின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட்டது இல்லை. கல்வியில் நாட்டம் இல்லாமல், கலைத்துறையை தேர்ந்தெடுத்தார், உஷா. தன், 22வது வயதில், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பாடல்களை பாட ஆரம்பித்தவர், இன்றும் தொடர்கிறார். கணவரும், இவரது இசைத் திறமைக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
'என் கணவரின் ஆதரவால் தான் இந்த வயதிலும் என்னால் மேடை ஏறி கலக்க முடிகிறது...' என்கிறார், உஷா உதுப்.
ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement