dinamalar telegram
Advertisement

கவிதைச்சோலை!

Share

எதையும் எதிர்பார்க்காதே...

துாக்கிப் பிடிக்க தோள்கள்
இருக்கும்போது
துள்ளி வரும் நதிகள் என்ன செய்யும்!

தோள் கொடுக்க தோழன்
இருக்கும்போது
துள்ளி வரும் அலைகள் என்ன செய்யும்!

வானம் தொட்டு பறக்கும் பறவை
இரை கிடைக்கும் என்று
பறப்பதில்லை!

புல்லை திங்க போகும் மாடு
கொம்பால் புல்லை
கட்டி போவதில்லை!

நல்ல காலம் பிறந்து விட்டால்
யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை!

விடியல் உருவாகும்போது
கடலுக்கு சொந்தம்!

உச்சம் அடையும்போது
உலகிற்கு சொந்தம்!

மூச்சைப் பிடித்து முன்னேறி செல்
முடியும் என்பதே
முயற்சியாளனின் தில்லு!

வலிகளை காணாமல்
வாழ்க்கையை உணர முடியாது!

சுமைகளை தாங்காமல்
வாழ்க்கையில் சுவை பட முடியாது!

எதையும் எதிர்பார்த்து வாழாமல்
எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம்!

வி. பார்கவி, விக்கிரவாண்டி.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement