dinamalar telegram
Advertisement

இதப்படிங்க முதல்ல...

Share

'மல்டி ஹீரோ' கதை தேடும், ஆர்யா!
ஒரு காலத்தில், 'சண்டை போட்டாலும், சட்டையில் மண் ஒட்டக்கூடாது. அந்த மாதிரி கதைகளில் தான் நடிப்பேன்...' என்று கூறி வந்த ஆர்யா, இப்போது அடியோடு மாறி இருக்கிறார். குறிப்பாக, 'மல்டி ஹீரோ கதைகள் என்றால், டபுள் ஓ.கே., ஒரே படத்தில், இரண்டு மூன்று, 'ஹீரோ'களுடன் போட்டி போட்டு நடிக்க விரும்புகிறேன். அந்த வகையில், எத்தனை பெரிய நடிகர்களுடனும் போட்டி போடுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். 'மல்டி ஹீரோ' கதைகளுடன் வாருங்கள்...' என, இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆர்யா.
— சினிமா பொன்னையா

மீண்டும் பழைய, 'ரூட்'டுக்கு திரும்பும், விஜய் ஆண்டனி!
நடிகராக களமிறங்கியபோது, வித்தியாசமான கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வந்த, விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் விஜய், அஜீத் பாணியில், 'மாஸ் ஹீரோ'வாகப் போவதாக சொல்லி, கமர்ஷியல் கதைகளாக நடித்தார். ஆனால், அவர் அப்படி நடித்த அனைத்து படங்களுமே தோல்வியை கொடுத்தன. அதனால், இப்போது மீண்டும் பழைய, 'ரூட்'டுக்கே திரும்பி நிற்கும், விஜய் ஆண்டனி, 'மழை பிடிக்காத மனிதன் என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தில், வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன்...' என்கிறார்.
- சினிமா பொன்னையா

சினி துளிகள்!
* பிரபாஸின், 25வது படமான ஸ்பிரிட்டில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். இவர், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* காதலர், விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, தன் தயாரிப்பு நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம், கூழாங்கல் என்ற படத்தை எடுத்த நயன்தாரா, தற்போது, ஊர்க்குருவி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
* தமிழில், மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த, விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி, 'ரீ - மேக்'கில் மாதவன் வேடத்தில், சைப் அலிகானும், விஜய் சேதுபதி வேடத்தில், ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர்.
* மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்த, கர்ணன் படம், பெங்களூரில் நடைபெற்ற, 'இனோவேட்டிங்' திரைப்பட விழாவில், சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
* வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அப்படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. அதேபோல், விஜய் சேதுபதியும் தான் நடித்த, தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. வேறு நடிகர்கள், இந்த படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கப் போகின்றனர்.
* கோலிவுட் சினிமாவின் முன்னணி, 'ஹீரோ'களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும், விரைவில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளனர். அப்படி அவர்கள் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.
* 'போபர்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள, இந்த ஆண்டின் முன்னணி நடிகர் - நடிகையர் பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா.
* டாக்டர் படத்தில் அறிமுகமாகியுள்ள, பிரியங்கா மோகன், அடுத்தபடியாக டாண் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களில், 'கமிட்'டாகி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
* ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, வழக்கமான காதல் கதைகளை ஓரங்கட்டி, 'த்ரில்'லர் கதைகளில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறார், விஷ்ணு விஷால்.
* விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்து வரும், பூஜா ஹெக்டே, அவரது வேகத்துக்கு ஈடு கொடுத்து நடனமாடுவது கடினம் என்பதால், ஒவ்வொரு பாடலையும் படமாக்குவதற்கு முன், நடன மாஸ்டர்களிடம் பிரத்யேகமாக சில நாட்கள் 'ரிகர்சல்' எடுத்து, அதன்பிறகே, விஜயுடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
* தன் முந்தைய படங்களுக்கு சிங்கம், வேங்கை என்று மிருகங்களின் பெயரில் டைட்டில் வைத்துள்ள, ஹரி, தற்போது தான் இயக்கி வரும் புதிய படத்திற்கு, யானை என்று பெயர் வைத்துள்ளார்.
* முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் படங்களை இயக்கிய, ராம்குமார், தனுஷிடம் ஒரு கதை சொன்னார். ஆனால், அந்த கதையில் வேறு படங்களின் சாயல் இருப்பதாக சொல்லி நடிக்க தயங்கினார், தனுஷ். இப்போது, அதே கதையை, சிவகார்த்திகேயனிடம் சொல்லி ஓ.கே., பண்ணி விட்டார், ராம்குமார்.

அவ்ளோதான்!

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement