dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

Share

* நவம்பர் 7 பிறந்தநாள் என்பதால் ஏழு நாளில் ஏழு லட்சம் பேருக்கு சோறு போட்ட மக்கள் நீதி மய்ய தலைவரே... இதற்கு பதிலாய், உங்கள் பிறந்தநாள் தோறும் 100 ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் பள்ளி, கல்லுாரி கால முழு செலவையும் ஏற்றால் ஆயுள் முழுக்க பல குடும்பங்கள் பசியாறுமே!

* 'ஓய்வின்றி வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு வருகிறார் முதல்வர்!' - துரைமுருகன். அமைச்சரே... இதை 'கடுமையான உழைப்பு'ன்னு எடுத்துக்கணுமா; 'முதல்வரோட கடமை'தானேன்னு கடந்து போகணுமா; இல்ல... 'ஓய்வில்லாம அவர் பார்வையிடுற அளவுக்கு தமிழகத்துல வடிகால் வசதியில்லாம அம்புட்டு தண்ணி தேங்கியிருக்கு'ன்னு புரிஞ்சுக்கணுமா!

* 'அம்மா' உணவகத்துல கால் ஸ்பூன் உணவை ருசி பார்த்ததை, 'உணவின் தரத்தை முதல்வர் ஆய்வு செய்தார்'னு ஊடகங்கள் சொல்லுது. எனக்கொரு சந்தேகம்... ருசி பார்க்குறதும், தரம் பார்க்குறதும் வேற வேறதானே! ஆரணியில 'ருசி'யான பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்ததுக்கு அந்த பிரியாணியில 'தரம்' இல்லாததுதானே காரணம்!

* மரம் விழுந்து இறந்த காவலர் கவிதா உடலுக்கு முதல்வர், தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல் துறை தலைவர் எல்லாரும் அஞ்சலி செலுத்துனாங்க; சென்னை, மந்தைவெளி சாலையில மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இறந்த முதியவர் சக்திவேல் உடலுக்கு... ம்ஹும்; ஆக... 'எல்லாருக்கும் எல்லாமும்'னு முதல்வர் சொன்னது உண்மை!

ஸ்மைல் ப்ளீஸ்...

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement