dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

கர்ப்பிணியான என் பொண்ணுகிட்டே கடந்த ஜூலை மாதம் பட்டரைபெரும்புதுார் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தடுப்பூசி போட்டுக்க சொல்லி வற்புறுத்தினாங்க; 'வேண்டாம்'னு மறுத்தவகிட்டே, 'ஊசி போட்ட மாதிரி நாங்க போட்டோ மட்டுமாவது எடுத்துக்குறோம்'னு சொல்லி போட்டோ எடுத்துட்டுப் போயிட்டாங்க!

செப்டம்பர் 28ம் தேதி இரண்டாவது தடுப்பூசிக்கு அவங்க வற்புறுத்தினப்போ, முதல் ஊசி போடலைங்கிறதை அவ சொல்லியும், 'கொரானோ தடுப்பூசி சான்றிதழ் இருந்தாத்தான் பிரசவத்துக்கு அனுமதிப்பாங்க'ன்னு பயமுறுத்தி அவளுக்கு ஊசியை போட்டு விட்டுட்டாங்க!

அன்னைக்கு ராத்திரியே கடுமையான இருமல், மூச்சுத்திணறலால என் பொண்ணு சிரமப்பட்டுட்டா; அதே சுகாதார நிலையத்துல இருமலுக்கு ஒரு ஊசி போட்டு அனுப்பினாங்க; ஆனா, நள்ளிரவு 1:00 மணிக்கு தீவிர வலிப்பு வந்து என் பொண்ணு இறந்துட்டா! கனகம்மா சத்திரம் காவல் நிலையத்துல வழக்கு பதிவாகியிருக்கு!

போன உயிர் திரும்ப வரப்போறதில்லை! ஆனா, இதுக்கு காரணமானவங்க பணி நீக்கம் செய்யப்படணும்; முதல்வரா கூட வேண்டாம்... ஒரு பெண் பிள்ளையோட தகப்பனா இதை நீங்க செய்யணும்; செய்வீங்களா?

- ஆரம்ப சுகாதார நிலைய அலட்சியத்தால் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி லாவண்யாவின் தாய் மஞ்சுளா, பெரியாங்குப்பம், திருவள்ளூர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

    பரிதாபம் உங்கள் பெண்ணுக்கு, அவர் வயிற்றில் இருந்த / இறந்த குழந்தைக்கு நல்ல கதி கிடைக்கட்டும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement