Load Image
dinamalar telegram
Advertisement

'பிக்ஸல் 6' ஏன் இந்தியாவுக்கு வரவில்லை?

'கூகுள்' நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களான 'பிக்ஸல் 6, பிக்ஸல் 6 புரோ' ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால், இந்த புதிய போன்களை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இயலாத நிலை என கூகுள் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சப்ளை செய்வதில் பிரச்னைகள் இருப்பதால், அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் இதற்கென தொழிற்சாலை மற்றும் வினியோக வசதி இல்லை என்பதால் யாருடனாவது இணைந்தே சப்ளை செய்ய வேண்டியுள்ளது.

மேலும், இந்தியாவில் விற்பனையாகும் போன்களில் 90 சதவீத போன்கள், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட போன்களே. இது போன்ற காரணங்களால், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement