சிறு வயதில், பொம்மை டெலிபோனை வைத்து விளையாடி இருப்போம். இப்போது அதை நினைவுபடுத்தும் விதமாக, அமெரிக்காவில் உள்ள பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான 'பிஷ்ஷர் - பிரைஸ்' ஒரு டெலிபோனை தயாரித்துள்ளது.
இது பொம்மை போன் என்றாலும், இதை நிஜ போனாகவும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த போனுடன் நமது ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டால் போன் பண்ணலாம், அழைப்புகளை ஏற்கலாம். இந்த பொம்மை டெலிபோனை, புளுடூத் வாயிலாக நமது போனுடன் இணைத்துக் கொள்லாம்.
இந்த போனிலிருக்கும் நம்பர்களை விரலால் சுழற்றி, விரும்பும் நபர்களை அழைக்கலாம். ஸ்பீக்கர் போன் வசதியும் உள்ளது. கூடவே 500 எம்.ஏ.எச்., பேட்டரியும் இதில் உள்ளது. இந்த டெலிபோன் பொம்மையின் 60வது ஆண்டை முன்னிட்டு, இந்த புதிய புளுடூத் வசதியுடன் கூடிய போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளனர். மற்றபடி பழைய மாடலில் எந்த மாறுதலையும் செய்யவில்லை. அமெரிக்காவில் இதன் விலை 60 டாலர். அதாவது 4,500 ரூபாய் ஆகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!