dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

Share

* 'கோவில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு மாற்றான திட்டம் பா.ஜ., வசம் இருப்பின் வரவேற்கத் தயார்' - அமைச்சர் சேகர்பாபு. ச்சே... இந்த மனசு முதல்வருக்கு ஏன் இல்லை; பின்னே... மது வியாபாரத்திற்கு மாற்றான வருவாய் திட்டங்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியும் முதல்வர் அங்கீகரிக்கலையே!

* 'அந்தந்த பகுதிகளில் பிரச்னைகள் தீர்க்கப்படாத காரணத்தால்தான் கோட்டையை நோக்கி மக்கள் வருகின்றனர்'னு தலைமை செயலர் வருத்தப்படுறார். ஆனா, நடைபயிற்சியில முதல்வரை சந்திக்கிற குறையில்லா தமிழர்கள், 'இன்பநிதி கால்பந்து போட்டியில ஜெயிக்க வாழ்த்துக்கள்'னு பூரி சுடுறாங்க! மக்கள் திருந்தணுமா; அதிகாரிகள் திருந்தணுமா?

* தமிழக மின் ஆளுமை முகமை மூலம் அரசு ஊழியர்கள் 3,645 பேருக்கு 'இ-ஆபிஸ்' திட்டத்தில் 120 நாட்கள் பயிற்சி; இதனால, அரசு இயந்திரத்தோட ஆற்றல் பெருகி மக்களுக்கான சேவைகள் விரைவா கிடைக்குமாம். சரிங்க... ஒருவேளை இதுக்கப்புறமும் சேவையில தாமதமிருந்தா, 'தமிழக அரசு இயந்திரம் தோற்றது'ன்னு ஒத்துக்குவீங்களா?

* 'சொற்ப அளவிலான மாணவர்களுக்கே 'கொரோனா' தொற்று; ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம்!' - அமைச்சர் மா. சுப்பிரமணியன். ஏங்க... 'நீட்' தேர்வுக்கு பயந்து சில மாணவர்கள்தானே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க; எதுக்கு எல்லாருக்கும் மனநல ஆலோசனை தந்தீங்க?
ஹா...ஹா...ஹா... ஹா...

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement