dinamalar telegram
Advertisement

அன்புள்ள சிஸ்டர்!

Share

ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, உலக சுகாதார நிறுவனம் 2020ம் ஆண்டை செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு சமர்ப்பித்திருந்தது. தனித்துவமிக்க இந்த ஆண்டிற்கான 'ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றிருக்கிறார் சென்னை, கே.கே.நகர் புறநகர் மருத்துவமனையின் செவிலியரான ஒ.வி.உஷா.

பணி துவக்கம்: 1987ம் ஆண்டு
முதல் களம்: புற்றுநோய் மையம், அடையார், சென்னை.
பதவி: செவிலி
துறை அனுபவம்: 34 ஆண்டுகள்

காலம் தந்த களம்
எனக்கு ரொம்ப பிடிச்ச பொருளாதாரத்துல இளங்கலை முடிச்சுட்டு வீட்ல எழுந்த என் திருமண பேச்சை தள்ளிப்போட தான் நர்சிங் படிச்சேன். அந்த முடிவு என் 21 வயசுல இருந்து 32 வயசு வரை காஞ்சிபுரம், மதுரமங்கலம் கிராமத்துல பணியாற்ற வைச்சது. இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துட்டேன்; ஒண்ணுல கூட தோல்வி கிடையாது!

'செவிலி' எனும் தராசில் சமூகத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
கிராமப்புற மக்கள்கிட்டே இதை செய்யணும், செய்யக்கூடாதுன்னு சொல்லி புரிய வைச்சுட்டா நாம கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டாங்க. நகர்ப்புறத்துல நேரெதிர்; உண்மைகளை மறைப்பாங்க! இரண்டு குழந்தைகளுக்கு அப்புறமும் சர்க்கரை, ரத்த அழுத்த பிரச்னையுள்ள மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய யோசிக்கிற கணவர்களை நான் பார்த்திருக்கேன்!

காலம் தந்த காயம்
அது தொலைதொடர்பு வசதி வளர்ச்சி பெறாத காலம். எனக்கு இரவு நேர பணிங்கிறதால காலையில வேலைக்கு கிளம்புற கணவரை பார்க்க முடியாது. பரிமாறிக்க வேண்டிய விஷயங்களை எழுதி வைச்சுட்டுப் போயிடுவோம். அப்போ, மகப்பேறு கால விடுமுறை மூணு மாசம்தான்; வார்டுல எங்கேயாவது ஒரு குழந்தை அழுதா எனக்கு தன்னால பால் சுரந்து சீருடை நனைஞ்சிடும். அதை கட்டுப்படுத்த மாத்திரை எடுத்துப்பேன்!
புற்றுநோய் மையத்துல சிறுவர் பிரிவுல பணி. இரவு நான் வீட்டுக்கு கிளம்புறப்போ கலகலப்பா பேசிட்டு இருந்த குழந்தையை காலையில வெள்ளை துணியில சுத்தி வைச்சிருப்பாங்க! இப்பகூட அந்த நினைவுகளால அடிக்கடி துாக்கத்துல இருந்து முழிச்சுக்கிறேன்.

'கொரோனா' தந்த உளவியல் சவால்?
எப்பவும் இரட்டை 'மாஸ்க்' போட்டுக்கிறேன். பெருமூச்சு விட வேண்டிய சூழல்ல கூட 'கொரோனா' பயம்; சிறுமூச்சா மாத்திக்கிறேன். ஆனா, 'கொரோனா'வை ஜெயிச்சிட்ட மாதிரி மக்கள் நடந்துக்கிறது ரொம்பவே பயமா இருக்கு.

சுருக்!
எங்களோட சேவைக்கு தலை வணங்கச் சொல்லலை; 'வாடகைக்கு வீடு தர மாட்டோம்'னு மட்டும் சொல்லாதீங்க!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த கடைசி வரி வலி மிகுந்தது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement