dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

கபடியில 'மாநில சாம்பியன்' என் பொண்ணு. 'காவல் துறையில சேரணும்'ங்கிறது அவ கனவு. இப்போ, முகம், வலது கண், கை காயங்களோட படுக்கையில கிடக்குறா! இதுக்கு காரணம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரோட அலட்சியம்! பிளஸ் 2 வணிகவியல் படிக்கிற என் மகளை, இந்த செப்டம்பர் 13ம் தேதி பள்ளி ஆய்வகத்துல இருந்த அமிலக் குடுவைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருக்காரு அவரு!
அப்போ குடுவை உடைஞ்சு அமிலம் தெறிச்சதுல என் பொண்ணுக்கு பலத்த காயம்; வலது கண்ணை இன்னும் திறக்க முடியலை.

பள்ளி தலைமையாசிரியர் மேல வழக்குப் பதிவாகி பணியிடை நீக்கம் பண்ணியிருச்சு கல்வித்துறை; மற்றபடி, அரசு தரப்புல இருந்து எங்களுக்கு எந்த உதவியும் இல்லை. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மவுனமா இருக்குறார். வயல் வேலை, கட்டட வேலைன்னு நாங்க கஷ்டப்படுறதை பார்த்துட்டு எங்களுக்கு ஆறுதல் சொன்ன பொண்ணு, இப்போ எங்களை பார்க்க முடியாம கிடக்கிறா!
என் மகள் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம் தரப்போறீங்க?

- அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் கவனக்குறைவால் படுகாயமுற்று தவிக்கும் மாணவி மு.பாமாவின் தாய் மு.சித்ரா, பள்ளிப்புதுப்பட்டு, விழுப்புரம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement