dinamalar telegram
Advertisement

புதிதாக சேர்ந்த புதினா

Share

புதிதாக புதினா வண்ணத்தில், 'சாம்சங் கேலக்ஸி ஏ 52 எஸ் 5ஜி' போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கறுப்பு, வெள்ளை, ஊதா ஆகிய நிறங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும் நிலையில், புதினா வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் மூன்று வண்ணங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய புதினா வண்ண போன், 8ஜி.பி., ரேம் + 256 ஜி.பி., சேமிப்பகம் மற்றும் 6ஜி.பி., ரேம் + 128 ஜி.பி., சேமிப்பகம் ஆகிய மாடல்களில் வந்துள்ளது.

மற்றபடி, இதர மூன்று வண்ண போன்களுக்கும் இந்த புதிய போனுக்கும் இடையே வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.

8ஜி.பி., மாடல் விலை: 37,999 ரூபாய்.
6 ஜி.பி., மாடல் விலை: 35,999 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement