dinamalar telegram
Advertisement

'ஜாலியா' ஜூபிடர்

Share

புதுசா புதுசா யோசிச்சு நவீன அம்சங்களுடன் புதிய 'டிவிஎஸ் ஜூபிடர் 125' ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது. டிரம் பிரேக், டிரம் அலாய், டிஸ்க் பிரேக் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.
எல்இடி ஹெட்லேம்ப், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், ஸ்போர்ட்டியான தோற்றம், மிக நீளமான சீட், டைமண்ட் கட் அலாய் வீல், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறத்தில் கேஸ் சார்ஜட் மோனோஷாக், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், டிஸ்க் பிரேக் உடன் சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பம், கால் வைப்பதற்கு விசாலமான இடம், கீழே இறங்காமல் பெட்ரோல் நிரப்பும் வகையில் முன்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, இரண்டு ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு பெரிய ஸ்டோரேஜ் வசதி, ஈசி சென்டர் ஸ்டாண்ட் வசதி, செமி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஆல் இன் ஒன் லாக் சிறப்பம்சம்.
இதன் 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 8.18 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஈகோ திரஸ்ட் பியுவல் இன்ஜெக் ஷன் உடன் டிவிஎஸ் இன்டெலிகோ தொழில்நுட்பம் இருப்பதால் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் கொடுக்கும். ஆரஞ்ச், நீலம், கிரே வண்ணங்களில் கிடைக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்):
டிரம் பிரேக் வேரியன்ட் - ரூ. 77,600
டிரம் அலாய் வேரியன்ட் - ரூ. 81,000
டிஸ்க் பிரேக் வேரியன்ட் - ரூ. 85,500

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement