dinamalar telegram
Advertisement

விளையாட்டு வீரர்களுக்கு வரித்துறையில் வேலை

Share

மத்திய மறைமுக வரி, சுங்க வாரியத்தில் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: வரி உதவியாளர் 10, ஸ்டெனோகிராபர் 1, ஹவில்தார் 10, எம்.டி.எஸ்., 3 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இதில் விளையாட்டு வாரியாக கிரிக்கெட் 6, ஹாக்கி 6, கால்பந்து 6, தடகளம் 2, நீச்சல் 2, பாட்மின்டன் 2 அடங்கும்.

கல்வித்தகுதி: வரி உதவியாளர் பணிக்கு டிகிரி, ஸ்டெனோகிராபர் பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, மற்ற பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.9.2021 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

அனுபவம்: சர்வதேச, தேசிய, பல்கலை அளவிலான போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 5.11.2021 மாலை 6:00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி: Assistant Director (Cadre)
Directorate General of Performance Management, Central Board of Indirect Taxes and Customs, Drum Shape Building, IP Bhawan, IP Estate, New Delhi-110002.

விபரங்களுக்கு: www.cbic.gov.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement