dinamalar telegram
Advertisement

7885 வங்கியில் கிளார்க் பணியிடங்கள்...

Share

நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு ஐ.பி.பி.எஸ்., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது.

காலியிடம்: உத்தரபிரதேசம் 1039, மஹாராஷ்டிரா 882, தமிழகம் 843, மேற்கு வங்கம் 516, கர்நாடகா 454, பஞ்சாப் 402, ம.பி., 389, ஆந்திரா 387, தெலுங்கானா 333, குஜராத் 325, டில்லி 318, ஒடிசா 302, பீஹார் 300 உட்பட மொத்தம் 7885 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில அலுவல் மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு தேவைப்படும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் என இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு. இம்முறை தமிழ் உட்பட அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு தேதி: பிரிலிமினரி தேர்வு 2021 டிச. மெயின் தேர்வு 2022 ஜன., / பிப்.,

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், ஈரோடு, சேலம், தஞ்சை, நெல்லை, விருதுநகர், நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175

கடைசி நாள்: 27.10.2021

விபரங்களுக்கு: www.ibps.in/wp-content/uploads/FinalAdvtCRPCLERKSXI.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement