dinamalar telegram
Advertisement

கச்சேரியும் செய்யலாம் காசும் பார்க்கலாம்

Share

'பயர்சைடு' எனும் புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்கள், போட்காஸ்ட்டர்கள், பேச்சாளர்கள் என பலரும் தங்களுடைய நிகழ்ச்சியை இதன் வாயிலாக நேரலையாக வழங்க முடியும்.
அதுமட்டுமல்ல; நிகழ்ச்சியை பார்க்க இந்த செயலியின் துணை கொண்டு டிக்கெட் விற்பனை செய்து, காசும் பார்க்கலாம். அல்லது விளம்பரங்கள் போட்டும் பணம் சம்பாதிக்கலாம். நாமே ஒரு சபாவை நடத்தி, கச்சேரி செய்வது போல!
அதுமட்டுமல்ல; நிகழ்ச்சியை யு டியூப், பேஸ்புக் உள்ளிட்ட பிற தளங்களிலும் அப்படியே இணைத்து, நேரலை செய்யலாம். இதுமட்டுமல்ல, நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் உரையாடலையும் நிகழ்த்தலாம். இதனால் பார்வையாளர்களின் கருத்துகளையும் அறிந்து நிகழ்ச்சியை மேம்படுத்தலாம்.
இந்த செயலி, நிகழ்ச்சியை 'ரிக்கார்டு' செய்வதுடன், அப்படியே ஆட்டோமேட்டிக்காக நேரலையும் செய்து விடும். என்ன தான் செயலிகளும் தொழில்நுட்பமும் துணை புரிந்தாலும், பார்வையாளர்களை கட்டிப்போடும் திறன் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement