dinamalar telegram
Advertisement

'கூகுள் பிக்ஸல் 6' போன் அறிமுகம்

Share

'கூகுள் பிக்ஸல் 6' இம்மாதம் 19ம் தேதியன்று அறிமுகம் செய்யப்படும் என, 'கூகுள்' நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்லைன் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில், 'கூகுள் பிக்ஸல் 6' மற்றும் 'கூகுள் பிக்ஸல் 6 புரோ' ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு போன்களின் தொழில்நுட்ப விபரங்கள் அறிமுகத்தின் போது தெரிவிக்கப்படும் என தெரிகிறது. இவை மட்டுமின்றி, 'பிக்ஸல் வாட்ச், பிக்ஸல் போல்டு போன்' மற்றும் புதிய 'நெஸ்ட் ஸ்பீக்கர்'கள் ஆகியவையும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அத்துடன் கூகுள் நிறுவனத்தின் 'போல்டபிள் போன்' குறித்தும் ஏதாவது தகவல்கள் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 19ம் தேதியன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் அறிமுக நிகழ்ச்சி அரங்கேறும். மேலும் இதை காண பிரத்யேகமான இணைய பக்கமும் தயாராகி உள்ளது. இதெல்லாம் சரி, இந்தியாவில் இவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது தான் நம் எதிர்பார்ப்பு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement