dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

Share

* 'மதுரை மக்களின் ஏழ்மையை பார்த்துதான் அரை ஆடை அண்ணலாக காந்தி மாறினார்'னு கிராமசபையில முழங்கின முதல்வர்கிட்டே, 'மாட்டுத் தொழுவத்துல வாழ்றோம்யா'னு மதுரை பெண்கள் அழுதுட்டாங்க. 'காந்திய வழியில் நடைபோடுவதே இன்றைய தேவை'ன்னு பேசின முதல்வர் தன்னோட எந்த சவுகரியத்தை இனி குறைச்சுக்கப் போறார்!

* 'தடுப்பூசி கொரோனாவை தடுக்கும்!' - அன்று; 'தடுப்பூசி மரணத்தை தடுக்கும்!' - நேற்று; 'இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 100க்கு 3 பேர் மட்டுமே மரணம்!' - இன்று; ஆக... அரசின் தீவிர முயற்சியால் 'கொரோனா' கட்டுப்படுத்தப்பட்டது; சரிதானுங்களே!

* 'கோடநாடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்'னு தீவிரமா செயல்படுறார் முதல்வர்; அதேநேரம், '41 சிலை கடத்தல் வழக்குகள்ல 16 வழக்குகளோட ஆவணங்களை இன்னும் கண்டுபிடிக்கலை'ன்னு அவர் நிர்வகிக்கிற காவல்துறை நீதிமன்றத்துல கூசாம சொல்லுது; என்னய்யா இதெல்லாம்!

* 'அம்மா மினி கிளினிக்' திட்டமே தி.மு.க., அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்'னு அ.தி.மு.க.,வினரே ஒப்புக் கொண்டு விட்டனர்; அதனால், இனி அந்த கிளினிக் அவசியமில்லை' - அமைச்சர் மா. சுப்பிரமணியன். ஏன் சார்... தேர்தல் நாள்ல 'டாஸ்மாக்'கை மூடி, 'மது வன்முறையைத் துாண்டும்'னு நீங்களே ஒத்துக்குறப்போ எதுக்காக இன்னும் அந்த வியாபாரம்?
'உண்மை'தான் அழகு!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement