dinamalar telegram
Advertisement

மாண்புமிகு மாணவியர்!

Share

உங்கள் கரம் ஏந்திய இன்றைய நாளிதழின் பக்கங்கள் பல மனிதர்களை செய்திகளாக தாங்கியபடி இருக்கிறது. இந்தவகையில் குறைந்த பட்சம் 1,000 மனிதர்களையாவது ஒரு மாதத்தில் அறிந்து கொள்கிறீர்கள். இவ்வரிசையில் நாமக்கல், திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தைச் சேர்ந்த இம்மூன்று மலர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவர்களின் மனம் மணமிக்கது!

மலர் 1: என் பேரு நந்திதா;
ஈரோடு, கஸ்துாரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளியில 8ம் வகுப்பு படிக்கிறேன். 'ஆன்லைன்' வகுப்புல எனக்கும், என் தங்கச்சி சவுபர்ணிகா, பெரியம்மா பொண்ணு சவுமியாவுக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கிறதால படிக்க ரொம்ப சிரமமா இருக்கு.

மலர் 2: அதே ஸ்கூல்ல நான் 7ம் வகுப்பு படிக்கிறேன்; நானும் நந்திதா அக்காவும் சேர்ந்து சவுபர்ணிகாவுக்கு 5ம் வகுப்புக்கான பாடத்தை சொல்லித் தந்திடுவோம். எனக்கு வகுப்பு இருந்தா மொபைல் போனை அக்கா விட்டுக் கொடுத்துடுவாங்க; அக்காவுக்கு கணக்கு பாடம் இருக்கும்போது நான் விட்டுக் கொடுத்துடுவேன்.

மலர் 3: நான், நந்திதா அக்கா, சவுமியா அக்கா மூணு பேரும் சேர்ந்து குருவிக்கூடு செஞ்சு வீட்ல வைச்சிருந்தோம். அதுல ஒரு சிட்டுக்குருவி வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிச்சது தெரியுமா!


மலர் 2: எங்களுக்கு ஸ்கூல்ல கைவினை பொருட்கள் தயாரிப்பு பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க.
அந்த அனுபவத்துல 'யு டியூப்' பார்த்து நாங்களே குருவிக்கூடு பண்ணினோம். ஆனா, அதுல குருவி வந்து குஞ்சு பொரிக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை.

மலர் 1: எங்க அம்மா நுால் மில்லுல வேலை செய்றாங்க. அப்பா சில வருஷத்துக்கு முன்ன இறந்துட்டாரு. எங்க அம்மா தீபாவோட 250 ரூபாய் தினக்கூலி, குடும்பத்துக்கு போதுமானதா இல்லை. அதனால, இந்தமாதிரி குருவிக்கூடுகளை நிறைய தயாரிச்சு சாலையோரத்துல விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணினோம்.

மலர் 2: தேங்காய் நார், நுால், பசை வைச்சு சிறுசும், பெருசுமா குருவிக்கூடுகள் தயாரிச்சோம். 80 ரூபாய்ல இருந்து 350 ரூபாய் வரைக்கும் விலை வைச்சோம். முதல்ல யாருமே கண்டுக்கலை!

மலர் 1: எங்களைப் பற்றின செய்தி பேப்பர்ல வந்ததைப் பார்த்துட்டு சிலர் போன் பண்ணி அஞ்சல் வழியா கூடு அனுப்பச் சொன்னாங்க. ரொம்ப அதிகமா விற்பனை ஆகலைன்னாலும் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் எங்களால முடிஞ்ச விதத்துல சுமையை குறைக்குறோம்!

மலர் 3: அரசு சொல்லி இருக்கிற மாதிரி நவம்பர் 1ம் தேதி ஸ்கூல் திறந்துட்டா அக்காவால குருவிக்கூடு தயாரிக்க முடியாது. இதனால அம்மாவுக்கு மறுபடியும்கஷ்டம்தான்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement