தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்துல காவல்துறையினரோட குறைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்குறப்போ என் மனசு கொதிக்குதுய்யா!
ஜூலை 12, 2020; என் நாலு மாத குழந்தைக்கு மருந்து வாங்கப் போன என் கணவரை நிறுத்தி, ஊரடங்கை காரணம் காட்டி பைக்கை பறிமுதல் பண்ணி, அவரை அசிங்கமா பேசி அலைக்கழிச்சாங்க ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார். மனசுடைஞ்சு போனவரு தீக்குளிச்சு உயிரை விட்டுட்டார். கருகின உடலோட, 'போலீஸ்தான் இதுக்கு காரணம்'னு அவர் நடுரோட்டுல கதறுன வீடியோவை தமிழகமே பார்த்தது.
விதவை உதவித்தொகைக்கான உத்தரவை தந்துட்டு, அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்குறதா ஆட்சியர் சொன்னாரு. '10ம் வகுப்பு பெயிலா... இதுக்கு தகுந்த மாதிரி வேலைக்கு ஏற்பாடு பண்றேன். என்ன... பாஸ் ஆயிருந்தா நல்ல வேலை கிடைச்சிருக்கும். சத்துணவுல கூட உதவியாளர் வேலைதான் கிடைக்கும்!'னு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆறுதல் சொன்னார். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்துல உங்களுக்கு கூட மனு அனுப்பிட்டேன். ம்ஹும்... எல்லாரும் ஏமாத்துறீங்க!
காவல்துறை அத்துமீறல்ல துாத்துக்குடிக்கு ஒரு நீதி; திருப்பத்துாருக்கு ஒரு நீதியா?
- காவல்துறையினரின் கெடுபிடியால் கணவர் முகிலன் தீக்கிரையாக மூன்று குழந்தைகளுடன் தவிக்கும் லீலா, ஆம்பூர், திருப்பத்துார்.
ரவுத்திர வீணை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!