dinamalar telegram
Advertisement

இதப்படிங்க முதல்ல...

Share

கமல் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட, சந்தானம்!
ஏற்கனவே வெளியான படங்களின், 'ஹிட்' பாடல்களை மீண்டும், 'ரீ - மிக்ஸ்' செய்து, இளவட்ட நடிகர்கள் நடித்து வரும் நிலையில், சந்தானத்துக்கும் அப்படியொரு ஆசை ஏற்பட்டது. அதையடுத்து, கமல் நடித்த, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, 'வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்...' -என்ற பாடலை, சமீபத்தில் வெளியான, டிக்கிலோனா படத்தில், 'ரீ - மிக்ஸ்' செய்திருந்தார். கமல்ஹாசன் மிகச்சிறப்பான நடனமாடி இருந்த அந்த பாடலை, சந்தானம் சொதப்பி விட்டதாக கருதிய கமல் ரசிகர்கள், 'எவ்ளோ தைரியம் இருந்தா, 'சூப்பர் ஹிட்' பாடலை, இப்படி நாஸ்தி பண்ணுவீங்க. இதுக்கு அப்புறம் அந்த பாட்டை எப்ப கேட்டாலும், உங்க கண்றாவியான ஆட்டம்தானே ஞாபகத்துக்கு வரும். இனிமேல், உலக நாயகனோட பாட்டை நாஸ்தி பண்ணினா, நடக்கிறதே வேற...' என்று, பிரித்து மேய்ந்து விட்டனர்.
— சினிமா பொன்னையா

மீண்டும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
முப்பத்தியாறு வயதான நயன்தாரா, சீக்கிரமே தன் காதலரை கரம் பிடித்து, குழந்தை குட்டிகள் என்று, 'செட்டில்' ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், மறுபடியும் சினிமாவில் எகிறியடிக்கத் துவங்கி விட்டார். ராஜமவுலியின், பாகுபலி 'வெப்சீரிஸில்' நடிக்கும் அதே வேகத்தில், இப்போது, ஷாரூக்கானுடன் ஹிந்தி படத்திலும் தெறமை காட்டப் போகிறார். இப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மெகா பட வாய்ப்புகள் வந்திருப்பதால், செம, 'குஷி மூடில்' இருக்கும், நயன்தாரா, தன் சக தோழியரிடம், 'அடுத்து, பாலிவுட்டிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டுதான் தெற்கே திரும்புவேன்...' என்றும், சொடக் போடுகிறார். கண்டு எடுத்தாளாம், ஒரு சுண்டு முத்தை!
— எலீசா

உடல் இளைத்த, நித்யாமேனன்!
தன்னை எடை குறைக்க சொன்ன இயக்குனர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்தார், குண்டு கத்தரிக்காய் நித்யாமேனன். அவர்களும் ஒருகட்டத்தில் அவரை புறக்கணிக்க, படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நேரத்தில், தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, ஒரே மாதத்தில் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகி ஆச்சரியம் கொடுத்து விட்டார். அதோடு, 'இனிமேல் தொடர்ந்து வாயை மற்றும் வயித்தைக்கட்டி இதே உடம்பை, 'மெயின்டெய்ன்' பண்ணப் போகிறேன். அதனால், தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்...' என்று, அபிமான இயக்குனர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.ஆளுக்கு தகுந்த சொட்டுக் கொடுக்கிறது!
- எலீசா

காமெடி சூப்பர் ஸ்டாராக மறுக்கும், யோகிபாபு!
ஒருமுறை ரஜினியிடம், 'நான், 'காமெடி சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் சூட்டிக் கொள்ளலாமா?' என்று, சந்தானம் அனுமதி கேட்டார். அப்போது, 'சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, ரஜினிகாந்துக்கு மட்டும் தான் என்று பட்டாவா எழுதி வைத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்...' என்று, ஜாலியாக சொன்னார், ரஜினி. அதையடுத்து சந்தானம், 'ஹீரோ'வாகி விட்டதால், 'காமெடி சூப்பர் ஸ்டார்' பட்டம் அநாதையாக நின்றது. இந்நிலையில், யோகிபாபுவை அந்த பட்டத்தை சூட்டிக்கொள்ளுமாறு கூறி வருகின்றனர். 'நானே சுமாரான காமெடியன். அப்படியெல்லாம் நான் பட்டம் வச்சிக்கிட்டா, யாராவது ஏத்துக்குவாங்களா?' என்று, பட்டதை ஏற்க மறுத்து வருகிறார், யோகிபாபு.

கறுப்புப்பூனை!
வாரிசு நடிகை என்ற வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த, ரெமோ நடிகை, தேசிய விருது பெற்ற பின், நான் உச்ச நடிகை என்ற ரேஞ்சுக்கு, 'பில்ட் - அப்' கொடுத்தார். அதன் காரணமாகவே, அவரது அபிமானிகள் அவரை ஓரங்கட்டத் துவங்கினர். விளைவு, அம்மணியின் மார்க்கெட் படுத்து விட்டது. தற்போது, பழைய பந்தாக்களை காற்றில் பறக்க விட்டுள்ள நடிகையை, தெலுங்கு சூப்பர் நடிகருடன் நடிக்கும் படத்தில், 'டூ - பீசில்' களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அதோடு நடிகையும், 'ரொமான்ஸ்' காட்சிகளில் கட்டுடலை காட்டி, 'கிக்' ஏற்றும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு பந்தா மட்டுமின்றி, தான் கடைப்பிடித்து வந்த, 'ஹோம்லி' நடிகை என்ற, 'இமேஜை'யும் இந்த படத்தில், காற்றில் பறக்க விட்டிருக்கிறார்.
'மாணவ தலைவியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கீர்த்தியை தேர்ந்தெடுத்தோம். பதவி கிடைத்ததும், யாரையும் மதிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து, நடந்து கொண்டாள். அதுமட்டுமின்றி, நம் கோரிக்கை எதையும், பிரின்சிபாலிடம் எடுத்துச் சென்று, நிறைவேற்றவும் இல்லை. அதனாலயே, அவளை ஒதுக்கி வைத்தோம்...'
'இந்த ஆண்டு நடக்க இருக்கும் மாணவ தேர்தலில் யாரை நிறுத்தலாம்?'
'கீர்த்தியையே நிறுத்துவோம். ஏனெனில், இப்ப அவ ரொம்பவே மாறிட்டா. நடை, உடை, பாவனை எல்லாமே மாறிட்டது. மாணவ தலைவியா தன் கடமை என்ன, எப்படி நடந்து கொள்ளணும் என்பதிலும் தெளிவா இருக்கா. தன் தவறை உணர்ந்த அவளுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்போம்...' என, இரு தோழியர் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!
* அண்ணாத்த, சாணிக்காகிதம் படங்களில் நடித்து விட்ட, கீர்த்தி சுரேஷ், அடுத்து, பாலா இயக்கும் புதிய படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவ்ளோதான்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement