dinamalar telegram
Advertisement

வரிசை கட்டும் 'ஜாப்ரா'

Share

பிரபல 'ஜாப்ரா' நிறுவனம், அண்மையில் இந்தியாவில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 'ஜாப்ரா எலைட் 7 புரோ, எலைட் 7 ஆக்டிவ், எலைட் 3, எலைட் 2' என பலவற்றை அறிமுகம் செய்துள்ளது.

ஜாப்ரா எலைட் 7 புரோ
இந்த ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனில், 'மல்டி சென்ஸார் வாய்ஸ்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டென்ட்' ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். பேட்டரி 30 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.
விலை: 18,999 ரூபாய்.

ஜாப்ரா எலைட் 7 ஆக்டிவ்
இந்த இயர்பட்சிலும் 'மல்டி சென்ஸார் வாய்ஸ்' தொழில்நுட்பமும், 'ஆட்டோ நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியும் உள்ளது. இதில், 'லிக்விட் சிலிகான் ரப்பர்' இருப்பதால், காதில் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும்.
மேலும் இந்த இயர்பட்சில் 'மைக்ரோபோன் வலை'யும் இருப்பதால், அழைப்புகளின் போது வெளியே வீசும் காற்றின் சப்தத்தை தடுத்துவிடலாம்.
விலை: 15,999 ரூபாய்.

ஜாப்ரா எலைட் 3
இந்த ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன், 6 மி.மீ., டிரைவ் கொண்டது.மேலும் நான்கு மைக்ரோபோன் அழைப்பு தொழில்நுட்பமும் உள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 7 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். 'சார்ஜிங் கேஸ்' உடன் சேர்த்தால் 28 மணி நேரம் பயன்படுத்தலாம்.
விலை: 6,999 ரூபாய்.

ஜாப்ரா எலைட் 2
'எலைட்' பிரிவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட இயர்பட்ஸ் இது. இரண்டு மைக்ரோபோன் அழைப்பு தொழில்நுட்பம் கொண்டது. 6 மி.மீ., டிரைவர் கொண்டது. இதுவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரமும்; சார்ஜிங் கேஸ் உடன் 28 மணி நேரமும் தாக்குப் பிடிக்கும்.
விலை: 5,999 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement