dinamalar telegram
Advertisement

ஒரு பட்டனை அழுத்தினால் போதும்

Share

'சோனி' நிறுவனம், இந்தியாவில் 'சோனி ஐ.சி.டி., டி.எக்ஸ்., 660' எனும் டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெக்கார்டரின் ஒரு பட்டனை அழுத்துவதன் வாயிலாக, உயர் தர ஆடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும் என, சோனி தெரிவித்துள்ளது.
இந்த ரெக்கார்டர் ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே மற்றும் 16 ஜி.பி., சேமிப்பகம் கொண்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பு, ஆடியோ பதிவுகளை தனித்தனி கோப்புகளாக 5 ஆயிரம் கோப்புகள் வரை வைத்துக் கொள்ளலாம்.

பின் புல சப்தங்கள் இல்லாமல், மிகத் தெளிவாக இதில் குரலை பதிவு செய்ய முடியும் என்பது தான் இதன் முக்கிய சிறப்பு. இதன் பேட்டரி 12 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும்.
விலை: 11,037 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement