dinamalar telegram
Advertisement

வண்ணமயத்தில் 'ஸ்கைப்'

Share

வீடியோ அழைப்புக்கான தளமான 'ஸ்கைப்', வண்ணமயமான புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சமீபத்திய 'அப்டேட்' பல புதிய அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மைக்ரோசாப்ட்' நிறுவனம், ஸ்கைப் தளத்தின் வடிவமைப்பு மற்றும் 'தீம்' விஷயங்களில் மாற்றங்களை செய்திருப்பதுடன், 'ஸ்கேன்' செய்யப்பட்ட கோப்புகளை பகிர்ந்துக் கொள்ள, 'ஆபீஸ் லென்ஸ்' வசதியை பயன்படுத்தும் வகையிலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், மற்றொரு சாதனத்திலிருந்து வீடியோவை சேர்ப்பதற்கான, 'டுவின்கேம்' வசதியும் வர உள்ளது. கூடவே, 'மீட் நவ்' வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோட்டிபிகேஷனுக்கான சப்தங்களிலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement