பஞ்சகவ்யம், பூச்சி விரட்டிகளை தயாரித்து விற்பது; 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' குறித்து இணையவழி கருத்தரங்கில் பேசுவது... இவை, தஞ்சாவூர், கருப்பட்டிபட்டி கிராமத்தில் வசிக்கும் இவரது ஊரடங்கு கால பணிகள்!
யார் இவர்?
பெயர்: த.யாழினி | 10ம் வகுப்பு
பள்ளி: 'லிட்டில் ஸ்காலர்' பள்ளி, தஞ்சாவூர்.
அடையாளம்: இயற்கை ஆர்வலர்
மாண்புமிகு யாழினிக்கு வேறேதும் அடையாளங்கள் உண்டா?
'காவிரிப் படுகையின் உயிர்ச்சூழலை மீட்டெடுத்தல்' கட்டுரை போட்டியில 2ம் பரிசு; 'நிலத்தடி நீர்மட்ட உயர்வில் நுண்ணுயிர்களின் பங்கு' ஆய்வு கட்டுரைக்கு மாநில அளவுல அங்கீகாரம்;
'ஐந்திணை வாழ்வியல்' பற்றிய ஓவியங்கள்... இப்படி, ஆர்வத்தை பல தளங்கள்ல பயன்படுத்துறேன்; வீட்டு நுாலகம் மூலமா தன்னம்பிக்கையை உயர்த்திக்கிறேன்!
களம் தந்த கனவு
எங்க ஊர் குளத்தை சுத்தம் பண்ணினப்போ, 'கவின்மிகு தஞ்சை குழுவினர்' நேர்ல வந்து 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றி சொல்லிக் கொடுத்தாங்க. 'குருங்காடு மூலமா பல்லுயிர்கள் வாழும் சூழலை ஏற்படுத்தணும்'ங்கிற என் கனவு துவங்கினது இந்த புள்ளியிலதான்! 'விலங்கியல்ல உயர்கல்வி படிக்கணும்'ங்கிறதும் என் கனவு.
எங்கள் யாழினி
'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்' பதத்திற்கு எடுத்துக்காட்டு எங்கள் யாழினி!'
- க. அனிதா. வகுப்பு ஆசிரியை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!