dinamalar telegram
Advertisement

சோளம், மக்காச்சோளத்தில் களை மேலாண்மை

Share

களைச்செடிகள் பயிர்களை விட வேகமாக வளர்வதோடு வேர்கள் அதிக ஆழம் வரை சென்று நீர், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன என்பதால் களை மேலாண்மை என்பது முக்கிய மேலாண்மைத்தொழில் நுட்பமாகும்.

பெரும்பாலான களைச்செடிகள் மண் மற்றும் காலநிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு வளர்கின்றன. இவற்றின் விதைகள் நீண்டகால விதை உறக்க பண்பையும், உகந்த சூழ்நிலையில் மீண்டும் முளைக்கும் பண்பையும் பெற்றுள்ளன.

மக்காச்சோளம் பயிரிடும் போது அருகம்புல், கொழுகட்டை புல், காக்காகால் புல் களைகளும், பார்த்தீனியம், சாரணை, தும்பை கீரைச்செடி, பூமி சக்கர பூண்டு மற்றும் கீழா நெல்லி, மேலா நெல்லி களைகளும் அதிகமாக வளர்கின்றன. விதைத்த 3ம் நாள் அல்லது 15 - 20 ம் நாளில் ஏக்கருக்கு 1000 கிராம் அட்ரசின் தெளித்தால் புல், அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம். ஊடுபயிராக பருப்பு வகைகள் இருந்தால் அட்ரசின் பயன்படுத்தக் கூடாது. ஏக்கருக்கு 0.75 கிலோ என்ற அளவில் விதைத்த 3-5 ம் நாளில் களை முளைக்கும் முன் பெண்டிமெத்தலின் தெளிக்க வேண்டும். இரட்டைச் சக்கர களை எடுக்கும் கருவியைக் கொண்டு விதைத்த 30- - 35ம் நாளில் களை எடுத்தால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன் உள்ளீடு செலவையும் குறைக்கலாம்.

15 - 20ம் நாளில் எக்டேருக்கு 25 - 30 கிராம் டோப்ரமிசோன் தெளித்தால் புல், அகன்ற இலை களைகளை தடுக்கலாம். விதைத்த 20 - 25 நாளில் எக்டேருக்கு 750 கிராம் வீதம் 2,4 டி.இ.இ தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.

சோளப் பயிர்களை விதைத்த 3ம் நாளில் எக்டேருக்கு 250 - 500 கிராம் அட்ரசின் தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம். 30 - 35 நாளில் எக்டேருக்கு 500 - 750 கிராம் 2,4 - டி தெளித்தால் கோரை, அகன்ற இலை களை மற்றும் ஸ்ரைகா' ஒட்டுண்ணியையும் கட்டுப்படுத்தலாம். கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியுடன் இயங்கும் கைத்தெளிப்பான் கொண்டே களைக்கொல்லிகளை வயலில் தெளிக்க வேண்டும். களை எடுக்கும் முன் மருந்து தெளிக்கும் போது வயலில் போதிய அளவு ஈரப்பதம் இருக்கவேண்டும்.

முரளி அர்த்தனாரி
இணைப்பேராசிரியர்
சஞ்சீவன், உழவியல்
இளநிலை ஆராய்ச்சியாளர்
வேளாண் பல்கலை, கோவை
0422 - 661 1246

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement