dinamalar telegram
Advertisement

வாங்கிட்டீங்களா...மஹிந்திரா

Share

மஹிந்திரா கார்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700, எஸ்யூவி.,க்கும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அக். 7 ல் 'புக்கிங்' துவங்குகிறது. எம்எக்ஸ், ஏஎக்ஸ் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். 5, 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும். மஹிந்திராவின் புதிய லோகோவுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

புதிதாக 'அட்ரினோஎக்ஸ்' கனெக்டட் செயலியை வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி ரிமோட் ஸ்டார்ட்-ஸ்டாப், கிளைமேட் கன்ட்ரோல், சன்ரூப் இயக்கம் உட்பட 64 சிறப்பு வசதிகளை பெறலாம்.

ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பனோரமிக் சன்ரூப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில் 'ஸ்மார்ட் பில்டர் டெக்னாலஜி' எல்இடி ஹெட்லைட், 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 8.0/10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா சிறப்பம்சம்.

2.2 லிட்டர் எம்ஹாக் டீசல்(185 பிஎச்பி பவர், 450 என்எம் டார்க் திறன்), 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல்(200 பிஎச்பி பவர், 380 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் வரும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0-60 கி.மீ., வேகத்தை 5 வினாடிகளில் எட்டும். அனைத்து வேரியன்ட்கள் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விலை:ரூ.11.99-19.79 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்: Ramani Mahindra - 86680 99617

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஐயா நீங்க குறிப்பிட்ட எக்ஸ் ஷோ ரூம் அமவுண்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு செல்கிறீன் வேண்டிய கொடுப்பார்களா? வேணும்னா பத்தோ இருபதோ மேல போட்டு கொடுக்கிறேன்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement