dinamalar telegram
Advertisement

கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு

Share

கத்தரி செடிகளில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டால் அதிக மகசூல் பெறலாம். கத்தரியில் நாற்றுப்பருவத்தில் நாற்றழுகல் நோயால் தண்டு அழுகி சாய்ந்துவிடுகின்றன. வடிகால் வசதி இல்லாததாலும் விதையை அதிகமாக விதைப்பு செய்யும் போது நாற்றழுகல் உருவாகும். இந்த நோய் விதைகளை அழுகச் செய்து முளைக்க விடுவதில்லை. மண் வழியாகப் பரவும்.

இதற்கான தீர்வுகளாக நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த ரகங்களைப் பயிரிட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா பூசணம் அல்லது 10 கிராம் பேசில்லஸ் பாக்டீரியா கலவையை கலந்து விதைத்தால் நாற்றழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். பரிந்துரைக்கும் அளவில் விதைகளை மேட்டுப்பாத்தியில் நற்றுவிட்டு அளவாக நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றங்காலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்சி குளோரைடு பூஞ்சாண கொல்லியை கரைத்து பூவாளியால் தெளிக்கலாம்.

பயிர் சுழற்சியில் நெல், கம்பு, கேழ்வரகு மற்றும் சோளத்தை சேர்த்து பயிரிடலாம். ஆழமாக கோடை உழவு செய்வதன் மூலம் நிலத்தின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும் நோய்க்காரணியை அழிக்கலாம். ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் பாக்டிடீரிய கலவையை 50 கிலோ சாண எரு அல்லது வேப்பம் புண்ணாக்குடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும். சிற்றிலை நோய்க் காரணி மற்றும் வாடல் நோய் பூசணமுள்ள செடிகளை அகற்றினால் தாக்கத்தை குறைக்கலாம். இலைப்புள்ளி நோய்கள் தீவிரமாக இருந்தால் கார்பன்டசிம் 0.1 சதம் அல்லது மேன்கோசெப் 0.2 சதம் அல்லது குளோரோதலோனில் 0.1 சதம் அல்லது டெபுகோனசோல் 0.1 சதவீத கரைசலை தெளிக்க வேண்டும்.

இலைதத்துப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது டைமீதோயேட் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி வீதம் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.

கல்யாணசுந்தரம், பேராசிரியர்
யமுனாராணி, உதவி பேராசிரியர்
பயிர் பாதுகாப்புத்துறை
வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர், 98659 61928

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement