இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரலாம் என, நோய் பரவும் தன்மை, நோய் கட்டுக்குள் இருக்கும் பகுதிகள், தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிபுணர்கள் குழு கணித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக மிதமான கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதித்தால், அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பணுக்களும் உள்ளது; அவர்களுக்கே கொரோனா தொற்று பாதிப்பும் உள்ளது.
லேசான பாதிப்பு ஏற்கனவே இருந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கேற்ப லேசாக உருவாகி இருக்கலாம். அதனால், கொரோனா தொற்று மீண்டும் பாதித்து உள்ளது.
தீவிர பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். மிதமாக, அறிகுறிகளே இல்லாமல் தொற்று பாதித்தால் பலவீனமாக இருக்கும். ஆனால், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டால், நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக உருவாகி விடுகிறது.
அதனால் எல்லாருக்கும் தடுப்பூசி போட்டால், வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம். நம் நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது அலை, கடந்த அலையைப் போன்று வீரியமாக இருக்காது.
ஆதாரம்: ஐ.சி.எம்.ஆர்., / ஐ.ஐ.டி.,
மூன்றாவது அலை எப்படி இருக்கும்?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!