dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு படையில் 400 பணியிடங்கள்

Share

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகளுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9.6.2021ல் வெளியான அறிவிப்பில் தற்போது பெண்கள் விண்ணப்பிப்பதற்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலியிடம்: இந்திய ராணுவ அகாடமியில் 370 (தரைப்படை 208, கப்பல்படை 42, விமானப்படை 120 ), இந்திய கப்பல் அகாடமியில் 30 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இதற்கு திருமணமாகாத பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: ராணுவம், கப்பல்படைக்கு 2.1.2003 முதல் 1.1.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ராணுவ அகாடமியில் தரைப்படை பிரிவுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பிரிவு படித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.

தேர்வு தேதி : 4.11.2021

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள் : 8.10.2021 மாலை 6:00 மணி.

விபரங்களுக்கு : www.upsc.gov.in/sites/default/files/Rev-Corgndm-Notif-NDA-NA-II-2021-Engl-24092021_Female.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement