dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

என் கணவர் 2000ம் ஆண்டுல இறந்துட்டார். அவருக்கான பூர்வீக சொத்துக்கு பட்டா மாற்றம் செய்ய போராடுறேன். காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார், வார்டு E, பிளாக் 9, நகர் அளவை எண் 95/2; இதுதான் பட்டா மாற்றப்பட வேண்டிய எங்க நிலம். மாவட்ட ஆட்சியர்ல இருந்து ஆலந்துார் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் வரைக்கும் மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.
இதுக்காக வேலுார்ல இருந்து ஆலந்துார் நகராட்சி அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் 'அதிகாரி இல்லை'ன்னு உதவியாளர் சொல்றதும், ஒருவேளை அவரை சந்திச்சுட்டா 'பத்து நாள் கழிச்சு வாங்க'ன்னு அவர் சொல்றதும் வாடிக்கை ஆயிருச்சு!

எங்களோட அந்த நிலத்துல குறிப்பிட்ட பகுதியை சாலை அமைக்க வேண்டி 1998ம் ஆண்டு அரசு கையகப்படுத்துச்சு. ஆனா, அதுக்கான தொகை இன்னும் கிடைக்கலை. இதை வாங்க குரோம்பேட்டை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு அலைஞ்சிட்டு இருக்குறேன். இந்த ஆகஸ்ட் 7ம் தேதியும் போனேன்; வழக்கம் போல மரியாதை குறைவா நடத்துனாங்க!
'மானுடப்பற்றும் மனிதாபிமானமும் எனது ரத்த ஓட்டமாக அமையும்'ங்கிற 'சமூக நீதி' நாள் உறுதிமொழி எல்லாம் சும்மா வேஷம்தான்; இல்ல சார்?

- பூர்வீக நிலத்திற்கு பட்டா மாற்றமும், நிலத்திற்கு இழப்பீடும் கேட்டுப் போராடும் 58 வயது சரோஜா சங்கர், கொசப்பேட்டை, வேலுார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement