* 'இலங்கை அகதிகள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்களுக்கு நாம் இருக்கிறோம்; எனவே, 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்' என்றே இனி அழைக்க வேண்டும்'னு முதல்வர் வகுப்பெடுத்தப்போ, 'நாம ஆதரவா இல்லாம இருந்ததுதான் அவங்க அகதிகள் ஆக காரணம் தலைவரே'ன்னு எனக்குள்ளே குரல் கேட்டுச்சே... அது ஏன்?
* 'பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. ஏற்கெனவே அறிகுறிகள் இருந்து தற்போது தொற்று உறுதியாகி இருக்கிறது' - தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். இதேமாதிரி, 'திறப்பு விழா' நிகழ்ச்சிகள்ல 'இது அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டம்; நான் திறந்து வைக்கிறேன்'னு அமைச்சர் பெருமக்கள் சொல்லணும்தானே!
* துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பா அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினதும், 'துப்பாக்கிச் சூடு நிகழும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு போலீஸ் பொறுப்பல்ல'ன்னு முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டசபையில பேசினதை ஞாபகப்படுத்தினார் எதிர்க்கட்சி தலைவர். முதல்வர் ஏன் இதை மறுக்கலை!
* 'என் தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய போராட்டத்தின் தியாகிகளுக்கு அரசு மணி மண்டபம் அமைக்கிறது எனில் அதை 'சமூக நீதி' போராட்டமாக அரசு அங்கீகரிக்கிறது'ன்னு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லிட்டார்.
'ஆமாம்'னு முதல்வரும் சொல்லிட்டா, 'சமூக நீதி காத்த பெரும் தலைவர்' அடையாளம் இனி ராமதாஸுக்குத்தான்! என்ன சார்... சொல்வீங்களா?
ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!