dinamalar telegram
Advertisement

பெண்மை என் பெருமை!

Share

'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...' பாடலை கேட்கும்போது நீங்கள் யார்; சிநேகாவின் உருவத்தில் இருக்கும் திவ்யாவா; இல்லை... திவ்யாவின் பாடலில் செந்தில்குமாராய் மலரும் சேரனா?

நம்மில் பெரும்பாலானோர் சேரன்தான். காரணம் யானையை வழிநடத்த உதவும் அங்குசம் போல மனிதர்களுக்கு நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆனால், மதுரை திருப்பரங்குன்றம் 24 வயது கீர்த்தனாவிற்கு அவரே அங்குசம்!

புத்தகம், இசை, சினிமா... இதுல கீர்த்தனாவின் நம்பிக்கை ஊற்று?
பிறந்து 10வது நாள் தாயை இழந்துட்டேன். 10 வயசுல அப்பா போயாச்சு. பிளஸ் 2 முடிக்குற சமயத்துல கால்ல ஏற்பட்ட ஒரு காயம் நாளடைவுல புற்றா வளர்ந்து என் வலது காலை பறிச்சிடுச்சு. பசிக்குதுன்னு சொல்லத் தெரியாம குழந்தைங்க அழுற மாதிரி இழப்புகளை புரிஞ்சுக்குற பக்குவம் இல்லாத வயசுல எல்லா இழப்புகளுக்கும் பழகிட்டேன்!

'சாதனை மனுஷி' - இப்படி உங்களை சொல்லலாமா?
ரொம்ப பெரிய வார்த்தை; அம்மா இறந்ததும், 10 நாள் சிசுவான என்னை வைகை ஆத்துல வீசிடலாம்னு சில சொந்த பந்தங்கள் முடிவெடுத்தப்போ, தன் மார்ல என்னை அணைச்சுக்கிச்சு எங்க அத்தை. அந்த கைகள்தான் புற்றுல இருந்து என்னை மீட்டு, டிப்ளமா நர்சிங் படிக்க வைச்சு அழகு பார்த்தது! 'சாதனை மனுஷி' எங்க அத்தைதான்!

மாற்றுத்திறனாளிகள் மேல நம்ம சமூகம் ரொம்பவே அக்கறை காட்டுமே...
(சிரிக்கிறார்) அரசு 'கொரோனா வார்டு'ல தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பிச்சேன். செயற்கை காலை காரணம் காட்டி வாய்ப்பை மறுத்துட்டாங்க! தனியார் மருத்துவமனையில செவிலியா பணிபுரியுற என்னால அரசு மருத்துவமனையில சேவை செய்ய முடியாதா; சுயநலத்துக்காக வாய்ப்பை பறிக்குறப்போ ஊனத்தைப் பற்றியெல்லாம் இந்த சமூகம் யோசிக்கிறது இல்லை!

புறக்கணிப்பு, அவமானங்களுக்கு பதில் தந்திருக்கீங்களா?
புறக்கணிச்ச சொந்தக்காரங்க முகமும், சமூகம் தந்த அவமான சம்பவங்களும் அடிக்கடி நினைவுக்கு வரும். 'வாழ்க்கை'ங்கிற போட்டியில கலந்துக்காமலே தோத்துடுவோமோன்னு பலதடவை நினைச்சிருக்கேன். ஆனா, செவிலிப் பணியில முதல் மாத சம்பளம் வாங்குன அன்னைக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வந்துச்சு. அதுக்கப்புறம் புறக்கணிப்புகளும் அவமானங்களும் பெருசா தெரியலை. நாம நல்லா வாழ்றதே சிறந்த பதில்தான்னு புரிஞ்சுக்கிட்டேன்.

வாழ்க்கையில ஜெயிச்சிட்டதா உணர்றீங்களா?
பாதி ஜெயிச்ச மாதிரிதான்; அரசு மருத்துவமனை செவிலியாகுறது மட்டும்தான் மிச்சம்.

த.கீர்த்தனாவின் புதுப்புது அர்த்தங்கள்!
கஷ்டம்? - உப்பு
அத்தை? - அம்மா
சமூகம்? - பள்ளி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    You are a brave lady. You deserve recognition at All India level.

  • Rajakumar - singapore,சிங்கப்பூர்

    நிச்சியம் கடவுள் உங்களுக்கு துணை யா இருப்பான் ....

  • என்னுயிர்தமிழகமே - Hyderabad,இந்தியா

    அந்த அத்தையை நானும் வணங்குகிறேன்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement