dinamalar telegram
Advertisement

'பவர்புல்' ரைடர்

Share

புதிய டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக்கின் 'லுக்' மிரட்டுகிறது. டிஸ்க், டிரம் பிரேக் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.

ஸ்போர்ட்டி வடிவமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப், ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள், கியர் இண்டிகேட்டர், ஸ்பிளிட் இருக்கைகள், 17 இன்ச் அலாய் வீல்கள், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், பின் சீட்டுக்கு கீழே ஸ்டோரேஜ் வசதி, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் உடன் மோனோஷாக், டிஸ்க் பிரேக் உடன் சின்கரைனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம், டியூப்லெஸ் டயர் சிறப்பம்சம்.

இதன் 124.8 சிசி, ஏர்ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 11.4 பிஎச்பி பவரையும், 11.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஈக்கோ, ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. 0-60 கி.மீ., வேகத்தை 5.9 வினாடியில் எட்டும். மணிக்கு அதிகபட்சமாக 99 கி.மீ., வேகத்தில் செல்லும். லிட்டருக்கு 67 கி.மீ., மைலேஜ் கொடுக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
டிரம் பிரேக் வேரியன்ட்- ரூ. 83, 386
டிஸ்க் பிரேக் வேரியன்ட்-ரூ. 85,469

சென்னை டீலர்: Brilliant TVS - 90809 17906

கோவை டீலர்: Lotus TVS - 98422 12828

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement