dinamalar telegram
Advertisement

வானமே எல்லை!

Share

'பயன்படுத்தப்படாமல் அலமாரிக்குள் தேங்கியிருக்கும் ஆடைகளை என்ன செய்யலாம்?' - மக்களின் இந்த மனஓட்டத்தை 'ஆன்லைன்' தொழிலில் மூலதனமாக்கி சாதித்துள்ளனர் சென்னை, அபிராமபுரம் தீபா பாலாஜி மற்றும் மான்சி காரா.

பாதைகள் பலவிதம்
'தி ரீராப் கம்பெனி' - இதுதான் எங்க முகவரி. பெண்கள் தர்ற நிறம் மங்காத புடவைகள், துப்பட்டாக்களை ரகம் பிரிச்சு, விலை நிர்ணயம் பண்ணி சந்தைப்படுத்துறோம்; விற்பனையான தொகையில உரியவர்களுக்கு முக்கால் பங்கு!
சின்ன கிழிசல், சுருக்கம், மடிப்பில் நைந்து போன புடவைகள், ரவிக்கை துணிகளை கத்தரிச்சு காயின் பவுச், அன்பளிப்பு கவர்; பார்டர்களை வெட்டி நிலைவாசல் தோரணங்கள்; வேஷ்டிகளை பயன்படுத்தி புடவை வைக்கும் உறைகள் தயாரிக்கிறோம்!
மீதமான சோபா உறை துணிகள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் தர்ற உற்பத்தி கழிவுத்துணிகள்ல டேபிள் ரன்னர், டேபிள் மேட், சமையலறை உடை தயாரிக்கிறோம். இப்போ, பல மாநிலங்கள்ல இருந்து வாடிக்கையாளர்கள் கிடைச்சிருக்காங்க. இந்தியா முழுக்க இந்த தொழிலை கொண்டு போகணும்ங்கிறது இலக்கு.

சிறப்பு பொருள்!
உற்பத்தி கழிவுத்துணியிலான 66 அங்குல நீளம், 13 அங்குல அகலம் கொண்ட கேன்வாஸ் லைனிங் டேபிள் ரன்னர் - ரூ.500 முதல்
79046 25398

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement